
கோவை மே 26,
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கிட்டாம்பாளையம் ஊராட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் பிரமுகருமான வி.எம்.சி.சந்திரசேகர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார்.சூலூர் சட்டமன்றத் தொகுதி தவெக உறுப்பினர் (எம்.எல்.ஏ) சுகுமார் முன்னிலையில் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.கட்சியில் இணைந்த வி.எம்.சி.சந்திரசேகருக்கு, எம்.எல்.ஏ சுகுமார் சால்வை அணிவித்து முறைப்படி வரவேற்பு அளித்தார்.இந்த நிகழ்வின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர். வி எம் சி சந்திரசேகர் முன்னாள் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி எம் சி மனோகரன் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.














Leave a Reply