
அரூர், அக்.23:
தருமபுரி மாவட்டம், அரூர் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் (KNMT) கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் சித்ரா இன்று நேரில் ஆய்வு செய்தார்.
இதில், ரூ.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் விநியோகப் பணிகள், ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆதரவற்ற விலங்குகளுக்கான கருத்தடை மற்றும் காப்பக மையம் (ABC Shelter), ரூ.57.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் நுண் உரம் தயாரிக்கும் மையம் (MCC Shelter) மற்றும் அறிவுசார் மையம் ஆகிய பணிகளின் முன்னேற்றம் குறித்து அவர் கேட்டறிந்தார்.
பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மண்டல இயக்குநர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, நகராட்சி ஆணையாளர் வே. விஜயஸ்ரீ, துப்புரவு ஆய்வாளர் ராஜ்குமார், பணி மேற்பார்வையாளர் வினோத் மற்றும் நகரமைப்பு ஆய்வாளர் சிந்தியா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.














Leave a Reply