
தர்மபுரி அக் 23,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட போக்குவரத்து பணிமனை முன்பு மழை நீருடன் கழிவுநீர் குளம் போல் தேங்கி நெடுஞ்சாலையில் செல்லுவதால்
வாகன ஓட்டிகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் இரவு கொட்டி தீர்த்த மலையால் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது.மேலும் பாலக்கோடு பிரதான நெடுஞ்சாலையான பாலக்கோட்டிலிருந்து தர்மபுரி செல்லும் பிரதான சாலையான போக்குவரத்து பணிமனை முன்பு கழிவு நீருடன் மழை நீர் குளம் தேங்கி அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பாலக்கோடு பேரூராட்சிக்கு பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர், ஒவ்வொரு முறையும் மழை வரும்போது பேரூராட்சியில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர் நெடுஞ்சாலையில் தேங்கி செல்வதாக குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு காலில் பட்டு மழை நீர் உடன் கழிவுநீர் சேர்ந்துள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக நீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் செய்தியாளர்
ஜி.முனியப்பன்
செல்: 9600869772














Leave a Reply