
பென்னாகரம், நவ.11 –
அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளி பென்னாகரம் மாணவர்கள் மாவட்ட அளவிளான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். கடந்த 6ஆம் தேதி தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான இளையோர் பிரிவு கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது . இந்த போட்டியில் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மேலும் மாவட்ட அளவிலான இளை யோர் பிரிவு கூடைப்பந்து போட்டியில் இரண்டாம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். மேலும் தடகள போட்டியில் மூன்று மாணவர்கள், நீச்சல் போட்டியில் இரண்டு மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்வேல், தமிழாசிரியர் முனியப்பன், உடற்கல்வி ஆசிரியர்கள் ராமலிங்கம், வீரன், மகேந்திரன், ரவி மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினார்.














Leave a Reply