Categories

மருதமலை முருகன் கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் அறையை  திருக்கோயில் அறங்காவலர்கள் தேர்வுக் குழுவின் மாநில உறுப்பினரும் நாடப்புற பாடகர்  வேல்முருகன் திறந்து வைத்தார்.

கோவை நவ 10,

கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக, அக்ஷயம் சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் அக்ஷயம் லயன்ஸ் கிளப் சார்பில் தாய்மார்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டுவதற்கான பிரத்யேக அறை மற்றும் புதிய டிக்கெட் கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் திறப்பு விழா மற்றும் அதன் சாவிகளை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரபல நாட்டுப்புற மற்றும் திரைப்படப் பின்னணிப் பாடகரும், தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள திருக்கோயில் அறங்காவலர்கள் தேர்வுக் குழுவின் மாநில உறுப்பினருமான வேல்முருகன், புதிய வசதிகளைத் திறந்து வைத்து, அதன் சாவிகளை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகத்தினர், அக்ஷயம் சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் அக்ஷயம் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி: