Categories

ஊத்தங்கரை அதியமான் தனியார் பள்ளி பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதியதில் 3 சிறுவர்கள் படுகாயம்


அரூர், அக்.23:

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே ஊத்தங்கரை அதியமான் தனியார் பள்ளி பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் 3 சிறுவர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், அரூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரபு, மீனாட்சிசுந்தரம்  ரஞ்சித் உள்ளிட்ட 3 சிறுவர்கள் நேதாஜி நகர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, தனியார் மருத்துவமனை அருகே உள்ள வளைவில் திரும்பிய *ஊத்தங்கரை அதியமான் தனியார் பள்ளிக்கு சொந்தமான பேருந்தும்*, எதிரே வந்த இருசக்கர வாகனமும்  எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 சிறுவர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் உடனடியாக 3 சிறுவர்களையும் மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து அரூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஊத்தங்கரை அதியமான் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.