Categories

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகள் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்தது – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு!


சென்னை அக்
சென்னை திமுக தலைமை அலுவலகம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகள் இடைத்தேர்தல் குறித்து ஆமலோசனை கூட்டம் நடந்தது இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செந்தில் பாலாஜி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, திருச்சி கிழக்குத் தொகுதியில் மு.க.ஸ்டாலின் நேரடியாகக் களமிறங்கக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரவி வரும் நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.

இதனிடையே, கடந்த சில நாட்களாக கட்சிப் பணிகளில் இருந்து விலகியிருப்பதாகக் கூறப்பட்ட செந்தில் பாலாஜி, இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றது கட்சியினரிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

வரவிருக்கும் இடைத்தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான தேர்தல் வியூகங்கள், வேட்பாளர் தேர்வு, தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆலோசனையில் பங்கேற்றிருப்பது, இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக தரப்பு தீவிரமாக தயாராகி வருவதைக் காட்டுவதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.