
கிருஷ்ணகிரி அக் 24:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று பள்ளி மேலாண்மைக் குழு (SMC – School Management Committee) மறுகட்டமைப்பு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டம் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மைக் குழுவின் புதிய தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர் திருமதி.உமா பச்சையப்பன் மற்றும் துணை தலைவர் கவிதாஅருள் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இதைத் தொடர்ந்து
பள்ளியின் வளர்ச்சி, மாணவர்களின் கல்வித்தரம் மேம்பாடு, அடிப்படை வசதிகள் மற்றும் பள்ளியின் செயல்பாடுகளில் பெற்றோர்கள் மற்றும் சமூகத்தினரின் பங்களிப்பை அதிகரிப்பது உள்ளிட்ட நோக்கங்களுடன் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெற்றோர்கள் மற்றும் தொடர்புடைய உறுப்பினர்கள் கலந்து கொண்டு, பள்ளியின் முன்னேற்றத்திற்கான தங்களது பங்களிப்பை வழங்கினர். இந்த கூட்டத்தில் பள்ளியின் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்














Leave a Reply