
தர்மபுரி அக் 24,
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள சோரியம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

மாணவ, மாணவிகளுக்கு பயிற்றுவிப்பதற்காக தமிழக அரசால் ஹை-டெக் லேப் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டு, அதற்கு தேவையான கணினிகள் அரசு சார்பில் வழங்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்த பின்பு வகுப்பறையை பூட்டிவிட்டு ஆசிரியர்கள் சென்றுள்ளனர்.
இன்று (24.10.2026) சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், காலை 11 மணிக்கு மேல் பள்ளி வளாகத்தில் விளையாட சிறுவர்கள் சென்றபோது, பள்ளி கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக பள்ளிக்கு வருகை தந்த தலைமை ஆசிரியர் ராதாமணி ஆய்வு செய்தார். பின்னர் அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் பள்ளியின் கணினி வகுப்பறையில் இருந்த 11 ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் கேமரா திருடு போனது தெரியவந்தது.















Leave a Reply