Categories


கோவை நவ 11,
கோவை மாநகராட்சி வார்டு எண் 1 க்கு உட்பட்ட பி எம் பி வசந்தம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து புதிதாக போடப்பட்ட தார் சாலையின் நடுவே பெரிய பள்ளமாக மாறிவிட்டது. இதையடுத்து பொதுமக்கள் அங்கு செடிகள், கற்கள் மற்றும் பிளக்ஸ் வைத்து மூடிவைத்துள்ளனர். விபத்துக்கள் ஏற்படும் முன் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகராட்சி வார்டு எண் 1 க்கு உட்பட்ட பி எம் பி வசந்தம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வந்தது. அப்பணிகள் முடிவடைந்த நிலையில் புதிதாக தார் சாலை போடப்பட்டது. இந்த நிலையில் அந்த தார் சாலையில் நடுவே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் இது குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் கவுன்சிலரிடமும் முறையிட்டும் எந்த பயனும் இல்லை என்றும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இது பிரதான சாலையாக உள்ளதால் போக்குவரத்துக்கு மிகவும் இடைஞ்சலாக உள்ளதாகவும்,  பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் பள்ளி வேன்களும் வேலைக்குச் செல்லும் பெண்களும் முதியோர் இல்லம் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.  1 வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தேர்தலுக்காக போடப்பட்ட சாலைகள் தரமற்ற சாலைகளாக உள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையடுத்து பொதுமக்கள் அங்கு செடிகள், கற்கள் மற்றும் பிளக்ஸ் வைத்து மூடிவைத்துள்ளனர். விபத்துக்கள் ஏற்படும் முன் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.