
கூடலூர் அக் 27,
நீலகிரி மாவட்டம் கூடலூரில் பழங்குடியினர் மக்களின் பாரம்பரிய நடனங்களுடன் நடைப்பெற்ற புத்தரி கதிர் அறுவடை திருவிழாவில் விவாசயிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்…
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளான புத்தூர் வயல், தொரப்பள்ளி, மேம்பாலக்கோடு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாரம்பரியமாக நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.
ஜீரகசால், கெந்தகசால், மர நெல் உள்ளிட்ட பல்வேறு வகையான பாரம்பரிய நெல் வகைகளை இவர்கள் பயிரிட்டு வருகின்றனர். வனப் பகுதிகளை ஒட்டிய கிராமங்கள் என்பதால் யானைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளின் தொல்லைகளில் இருந்து தங்களது விவசாய பயிர்களையும், விவசாயத்தையும் பாதுகாக்க இந்த அறுவடை திருவிழா பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தென்மேற்கு பருவமழை துவங்கியதும் ஐப்பசி மாதத்தில் வயல்களை தயார் செய்து நாற்று நட்டு, வயல்களில் வளரும் தரமான பால் கதிர்களை பழங்குடியின மக்களின் பொது குலதெய்வமான வனதேவதை கடவுளுக்கு படைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் துலாம் மாதம் ( தமிழுக்கு ஐப்பசி மாதம் ) நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியில் விரதமிருக்கும் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவரவர் நெல் வயலில் இறங்கி பால் கதிர்களை எடுத்து கோவில் உள்ள பூஜாரிகள் கதிர் கட்டை வரவேற்று கோயிலுக்குள் எடுத்துச் சென்று அங்குள்ள வன தேவதைக்கு படையல் செய்த பின்னர் கதிர்களை அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்துடன் இன்று துவங்கிய இந்த புத்தரிசி திருவிழா நிறைவடைந்த பின்னர் கிராமங்களில் உள்ள தங்களது குல தெய்வ கோவில்களில் பூஜை செய்து தங்கள் வயல்களில் விளைந்த முற்றிய கதிர்களை கொடுப்பது வழக்கமாக இருக்கும் நிலையில், இந்த பாரம்பரிய புத்தரி விழாவில் பல்வேறு இன மக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.















Leave a Reply