
.
பொள்ளாச்சி- அக்-31
ஊட்டி கொடைக்கானல் போன்று கோவை மாவட்டம் வால்பாறைக்கு செல்ல நாளை முதல் இ பாஸ் நடைமுறைப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஆழியாறு வனத்துறை சோதனை சாவடி அருகே வால்பாறை செல்லக்கூடிய சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஸ்கேன் செய்து இலவசமாக இ -பாஸ் பெரும் வசதியை ஏற்படுத்தி உள்ளனர்.இதையடுத்துகோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார் மற்றும் சார் ஆட்சியர் ஆழியார் வனத்துறை சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்டனர் இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் கூறுகையில் வால்பாறை செல்லும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக இ -பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் மற்றும் வால்பாறையை சேர்ந்த உள்ளூர் நபர்கள் ஒருமுறை இபாஸ் எடுத்தாலே போதுமானது என்றும் ஆழியார் அருகே உள்ள நவமலை, கவியருவி, பகுதிக்கு செல்லும் நபர்களும் கண்டிப்பாக இபாஸ் எடுத்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என தெரிவித்தார்.














Leave a Reply