
சேலம் டிச 25,
சேலம் மாவட்டம் ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து நேற்று டிசம்பர் 24-ம் தேதி ஏற்காடு வேலூர் பகுதிக்கு அரசு பேருந்து, கடுக்காமரம் வழியாக சென்று கொண்டிருந்த போது, திடீரென பேருந்தின் இன்ஜினியிலிருந்து லேசான தீ பற்றி எரிந்துள்ளது.

இதனை கவனித்த ஓட்டுனர். உடனடியாக பேருந்தை சாலையின் ஓரம் நிறுத்தி பயணிகளை பத்திரமாக பாதுகாப்பாக இறக்கி விட்டார். இந்நிலையில் அவ்வழியாக வந்த, ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா குணசேகரன், சம்பவம் குறித்து விசாரித்து, பேருந்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததுடன், பேருந்தில் பயணித்த பத்திற்க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரையும், அவர்களது சொந்த ஊர்களுக்கு தனது வாகனத்தில் அனுப்பி வைத்தார். பேருந்தில் லேசான தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில், சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தி:- திரு.ராஜேந்திரன்
சேலம் மாவட்ட நிருபர்














Leave a Reply