Categories

திருப்பூரில் வேன் மோதி டிரான்ஸ்பார்மர் உட்பட 6 மின்கம்பங்கள் சரிந்து சேதம் போக்குவரத்து பாதிப்பு.

திருப்பூர் நவ 8
திருப்பூர் பெரிய கடை வீதி பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு பணிக்காக மாநகராட்சி சார்பில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய் சீரமைப்பு பணி நடைபெற்று வந்தது இதற்காக தோண்டப்பட்ட மண் அருகிலேயே கொட்டப்பட்டிருந்த நிலையில் மிகவும் குறுகலான பாதை மட்டுமே இருந்தது. இதில் போக்குவரத்தை தடை செய்யாமல் முழுமையாக அனுமதித்திருந்த நிலையில் அந்த வழியாக சென்ற வேன் மின்மாற்றியின் மீது உரசியது. இதில் ஏற்கனவே சேதம் அடைந்திருந்த மின் மாற்றி முழுவதுமாக சரிந்து கீழே விழுந்தது இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த ஐந்து மின்கம்பங்களும் அடுத்தடுத்து சரிந்து நின்றது இதன் காரணமாக அப்பகுதியில் உடனடியாக மின் வினியோகம் தடை செய்யப்பட்டது.

மேலும் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இதனைை தொடர்ந்து வேலை ஓட்டி வந்த நபரை இப்படித்தான் திருப்பூர் தெற்கு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் கிரேன் உதவியுடன் மின்மாற்றி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.