Categories

அரூர் தொகுதியில் போட்டியிட அதிமுக ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மனு.

தருமபுரி, டிசம்பர் 19:

2026ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் அரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது விருப்ப மனுவினை ஒன்றிய குழு உறுப்பினர் பழனிசாமி இன்று தலைமை கழக அலுவலகத்தில் அளித்தார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் ஆசீர்வாதத்திலும், கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி  நல்வாழ்த்துகளுடனும், கழகத்தின் தேர்தல் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கழக அமைப்பு செயலாளர் மற்றும் தருமபுரி மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர்
கே. பி. அன்பழகன்  வழிகாட்டுதலின் பேரில், இந்த விருப்ப மனு தாக்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.