
ஈரோடு ஜன 25,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் மயான வசதி செய்து கூறி ஆனந்த நகர் ஆதிதிராவிடர் நலப் பொதுமக்கள் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 40 ஆண்டுகளாக மயான வசதி செய்து தராத ஈரோடு மாவட்ட நிர்வாகத்தையும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் மெத்தன போக்கையும் துறை சார்ந்த அரசு அதிகாரிகளையும் கண்டித்து கண்டன கோஷங்கள் முழங்கப்பட்டது தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆனந்த நகர் ஆதிதிராவிடர் பொதுமக்கள் 1985 ஆம் ஆண்டு அரசு ஆணை எண் 851 என்ற விதியின்படி சுமார்40 ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றம் எங்கள் பகுதியான ஆனந்த நகர் ஆதிதிராவிடர் மக்கள் வாழும் பகுதிக்கு மயான வசதி செய்து தர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் இவ்வளவு ஆண்டு காலம் ஆகியும் நாங்கள் இன்னமும் மயான வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். நாங்கள் கேட்பது வீடு கட்ட பட்டா நிலம் அல்ல, இறந்தால் புதைப்பதற்கு இடம் மட்டுமே எனவே இனியும் மாவட்ட நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் அலட்சிய போக்குடனும், மெத்தன போக்குடனும் நடந்து கொண்டால் நாங்கள் இன்னுமும் தீவிரமான போராட்டங்களை கையில் எடுப்போம் மேலும் தேர்தல் புறக்கணிப்பு போராட்டமும் நடத்துவோம் என தெரிவித்தனர்.














Leave a Reply