
பாலக்காடு பிப் 7,
கேரளா மாநிலம் பாலக்காட்டில், தர்பூசணி மூட்டைகளுக்குள் மறைத்து சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


இதில் 18,000 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 4,800 டெட்டனேட்டர்கள் அடங்கும்.
தமிழ்நாடு தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (48) என்பவர் இந்த வாகனத்தை ஓட்டி வந்ததாகத் தெரியவந்தது.
வாகன சோதனையில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு
பாலக்காடு தெற்கு போலீஸார் நேற்று முன்தின இரவு, பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரி அருகே வாகன சோதனை நடத்தினர்.
அப்போது வந்த சரக்கு வாகனத்தை நிறுத்துமாறு சைகை செய்த போதும்,
அது நிற்காமல் சென்றது.
சந்தேகித்த போலீஸார் ஜீப்பில் விரட்டி, வாகனத்தைத் தடுத்து நிறுத்தினர்.
சோதனையில், பெட்டிகள் மற்றும் தர்பூசணி மூட்டைகளின் அடியில் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் மறைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவை ஆபத்தான வெடிபொருட்கள் என்பதால், தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அரூர் காவல் நிலையத்தில் நான்கு பேரிடம் விசாரணை
விசாரணையில், வாகனம் தர்மபுரி அரூர் அருகே உள்ள அச்சல்வாடி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமாரால் ஓட்டப்பட்டது தெரியவந்தது. போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும், தென்கரை கோட்டை பகுதியைச் சேர்ந்த சகாயநாதன் மகன் துரைராஜ் (30) உள்ளிட்ட மூன்று நபர்களிடம், பாலக்காடு காவல் உதவி ஆய்வாளர் சுனில் தலைமையில் ரஜித், ஷாலு, ரெஜிஸ், ஜெயராம் ஆகியோர் அரூர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிபொருட்கள் எங்கு கொண்டு செல்ல திட்டமிட்டது, எதற்காக கடத்தப்பட்டது என்பன குறித்து விசாரணை தொடர்கிறது.
இதனால் அரூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.














Leave a Reply