Categories

‘அறி­வுத் திரு­விழா ‘ என்ற பெய­ரில்தி.மு.க. கொடி அறி­முக 75-–வது ஆண்டு விழா!முத­ல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்­தார்!!


சென்னை, நவ.8
சென்னை வள்­ளு­வர் கோட்­டத்­தில் தி.மு.க. 75  அறி­வுத் திரு­வி­ழாவை  முதல்­வர் மு.க. ஸ்டாலின்  இன்று தொடங்கி வைத்­தார்.  இதில்  முற்­போக்கு புத்­த­கக் காட்சி , காலத்­தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூல் வெளி­யீடு நடை­பெற்­றது. 2 நாட்­கள் நடக்­கும் விழா­வில் கருத்­த­ரங்­கம் நடக்­கி­றது.
தி.மு.க.பவள விழா  இளை­ஞர் அணி  `தி.மு.க. 75 அறி­வுத் திரு­விழா’வாகக் கொண்­டா­டப்­ப­டு­கி­றது.  தி.மு.க. தலை­வ­ரும் , முதல்­வ­ரு­மான மு.க.ஸ்டாலின்  வழி­காட்­ட­லில் இளை­ஞர் அணிச்­செ­ய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின்  முன்­னெ­டுப்­பில் திரா­விட மாடல் பயிற்சி பாச­றைக் கூட்­டங்­கள், சட்­ட­மன்­றத் தொகுதி தோறும் கலை­ஞர் நூல­கம், முர­சொலி பாச­றைப் பக்­கம், முத்­த­மி­ழ­றி­ஞர் பதிப்­ப­கம்’, இளம் பேச்­சா­ளர்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்து கருத்­தி­யல் பயிற்சி அளிப்­பது, கலை­ஞர் மாண­வப் பத்­தி­ரி­கை­யா­ளர் திட்­டம், கலை­ஞர் நிதி நல்கை திட்­டம் ஆகிய கருத்­தி­யல் பணி­களை தொடர்ந்து செய்து வரு­கி­றது.
இதன் தொடர்ச்­சி­யாக  திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் 75-–ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு  இளை­ஞர் அணி சார்­பில்  தி.மு.க 75 அறி­வுத் திரு­விழா என்­னும்  நிகழ்ச்­சியை நடத்­து­கி­றது.
அந்த வகை­யில் சென்னை, வள்­ளு­வர் கோட்­டத்­தில், தி.மு.க இளை­ஞர் அணி சார்­பில் `தி.மு.க 75 – அறி­வுத் திரு­விழா என்­னும்  நிகழ்ச்சி  இன்று (நவ.8) காலை தொடங்­கி­யது. இதை­ய­டுத்து  முதல்­வர் மு.க.ஸ்டாலின் , காலத்­தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளி­யிட்டு, இரு­வண்­ணக்­கொ­டிக்கு வயது 75 என்ற கருத்­த­ரங்­கத்­தை­யும் முற்­போக்கு புத்­த­கக் காட்சி’யையும் தொடங்கி வைத்­தார். இதில் 75 ஆண்­டு­கால வர­லாறு கொண்ட தி.மு.க. வின் அர­சி­யல், சமூ­கம், பொரு­ளா­தா­ரம், பண்­பாட்­டுத் தளங்­க­ளில் ஏற்­ப­டுத்­திய தாக்­கங்­கள் குறித்து எழுத்­தா­ளர்­கள், சமூ­கச் செயற்­பாட்­டா­ளர்­கள், ஊட­க­வி­ய­லா­ளர்­கள், சமூக மற்­றும் அர­சி­யல் இயக்­கங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள், தேசி­யக் கட்­சித் தலை­வர்­கள், கழ­கத் தலை­வர் உள்­ளிட்ட தி.மு.க தலை­மைக்­க­ழக நிர்­வா­கி­கள் எழு­திய கட்­டு­ரை­கள் அடங்­கிய, 1,120 பக்­கங்­கள் கொண்ட காலத்­தின் நிறம் கருப்பு சிவப்பு என்­னும் புத்­த­கம், முத்­த­மி­ழ­றி­ஞர் பதிப்­ப­கத்­தின் சார்­பில் உரு­வா­கி­யுள்­ளது. இந்த  ஆவ­ணத்தை முதல்­வர் மு.க. ஸ்டாலின்  வெளி­யிட்­டார். கட்சி  பொதுச்­செ­ய­லா­ள­ரும் , நீர்­வ­ளத்­துறை அமைச்­ச­ரு­மான  துரை­மு­ரு­கன்  பெற்­றுக் கொண்­டார். தொடர்ந்து தி.மு.க.  பொரு­ளா­ளர் டி.ஆர்.பாலு எம்.பி., கட்சி முதன்­மைச் செய­லா­ளர் அமைச்­சர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செய­லா­ளர்­கள்,  இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் , துணை முதல்­வ­ரு­மான  உத­ய­நிதி ஸ்டாலின் மற்­றும்  இளை­ஞர் அணி துணைச் செய­லா­ளர்­கள் முன்­னி­லை­யில்  தன்­மா­னம் காக்­கும் கழ­கம் மேடை நாட­கம் நடை­பெற்­றது. தொடர்ந்து காலை 11. 30 மணிக்கு இரு­வண்­ணக் கோடிக்கு வயது 75 என்ற தலைப்­பில் கருத்­த­ரங்கு நடந்­தது.
இதற்கு திரா­விட இயக்க ஆய்­வா­ளர் க.திரு­நா­வுக்­க­ரசு தலைமை வகித்­தார். துணைப் பொதுச் செய­லா­ளர்­கள்   திருச்சி சிவா எம்.பி., ஆ.ராசா, கொள்கை பரப்பு செய­லா­ளர் ரா. தி.சபா­பதி மோகன் ஆகி­யோர் பேசி­னார்.