Categories

சின்ன பசிலிகுட்டை ‌ கிராமத்தில் 13 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

திருப்பத்தூர் நவ 4
சின்ன பசிலிகுட்டை ‌ கிராமத்தில் 13 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர். வீடியோ‌ வைரல்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன பசிலிகுட்டை கிராமம் மதன் வட்டம் பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வீரமணி செல்வம் இவருடைய வீட்டின் அருகே சுமார் 13 அடி அளவிலான மலை பாம்பு சுற்றி வந்துள்ளது. இதனை அறிந்த வீரமணிசெல்வன் இது குறித்து திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார் பின்னர் உடனடியாக திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறிது நேரம் போராடி 13 அடி அளவிலான மலை பாம்பை லாவகமாக பிடித்தனர்.மேலும் பிடிக்கப்பட்ட மலை பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது