
விருதுநகர் நவ 10,
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் எனும் வாக்காளர் கணக்கீட்டு பணி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால பாக் முகவர்கள் வீடு வீடாக சென்று படிவங்கள் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.அவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பாக் முகவர்கள் மூலமாக அதிகபட்சம் 50-படிவங்கள் பெற்று வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பாக முகவர்கள் மூலமாக பெற்றால் முறைகேடுகள்* நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும்,வாக்காளர்கள் விவரங்கள் குறித்தும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை, வீடு, வீடாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்களே* நேரடியாக பெற வேண்டும் என வலியுறுத்தியும்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஆட்சியரிடம்
அதிமுக கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அப்போது போது
கழக சிறுபான்மை நல பிரிவு பொருளாளர் ஜான் மகேந்திரன், முன்னாள் வாரிய தலைவர் மான்ராஜ்,ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா,
கழக மகளிரணி துணைச்செயலாளர், முன்னாள் எம்எல்ஏ ஸ்ரீவிமற்றும் மற்றும் விருநகர் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கழக நிர்வாகிகள், பிற அணிகள் சார்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்














Leave a Reply