
வாணியம்பாடி டிச.21-
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி.விவசாய நிலத்திற்கான இலவச மின் இணைப்பு பெற தட்கல் முறையில் டி.டி எடுத்து வந்தும், தட்கல் முடிந்து விட்டதாக அதிகாரிகள் கூறியதால், மின் இணைப்பு வழங்கக்கோரி விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மின்சார வாரியம் சார்பில் விவசாயிகளுக்கு தட்கல் மின்சாரம் விரைவு மின்சாரம் பெற விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கு திருப்பத்தூர் மேற்பார்வை பொறியாளர் பெயருக்கு ரூபாய் 3 லட்சம் வரை வரைவு காசோலை எடுக்க வேண்டும் என்றும் கடந்த 16 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை 16 ஆம் தேதி முதல் வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, கேத்தாண்டபட்டி , தும்பேரிஉள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் ஆடு, மாடுகளை விற்றும், தங்கள் நகைகளை வங்கியில் அடகு வைத்தும், ரூபாய் 3 லட்சம் வரைவோலை எடுத்து, வாணியம்பாடி மின்வாரிய செயற் பொறியாளர் அலுவல கத்திற்கு வந்து கொடுத்த போது, அந்த சேவை முடிந்து விட்டது என்று கூறியதால், ஆத்திரம் அடைந்த விவசாயிகள், அறிவிப்பு விட்டு 2 நாட்கள் ஆகிறது. அதில் ஒருநாள் மின் துண்டிப்பு ஏற்பட்டது. ஒரே நாளில் எப்படி வரைவு காசோலை எடுத்து விண்ணப்பிக்க முடியும், அறிவிப்பு வெளியிட்ட மறுநாளே எதற்காக சேவை நிறுத்தப்பட்டது என்று மின்வாரிய செயற்பொறியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர், அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் அங்கு வந்த செயற்பொறியாளர்
இங்கு 10 ஆயிரம் பேர் என்ற இலக்கில் அறிவிப்பு வெளியிட்டதாகவும், தற்போது 14 ஆயிரம் பேர் வரை வரைவோலை எடுத்து விண்ணபித்துள்ளதாகவும் தங்கள் வரைவோலை நகல் எடுத்து அலுவகத்தில் கொடுத்து செல்லுங்கள் அதை மேலதிகாரி களிடம் பேசி இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர், விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
-திருப்பத்தூர் மாவட்ட நிருபர் – ஐசக் குமார்














Leave a Reply