
கள்ளக்குறிச்சி டிச 6,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா 416 மிதிவண்டியை மாணவிகளுக்கு தொகுதி எம்எல்ஏ மணிக்கண்ணன் வழங்கினார் நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் திருநாவுக்கரசு, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஜலாபுதீன், கவுன்சிலர்கள் கலா, செல்வகுமாரி ரமேஷ்பாபு,விஜயலட்சுமி பூபதி, ஆசிரியர்கள் கனக சபை, ரக் மனிஷாபேகம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தெய்வீகன், உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் முதுகலை ஆசிரியர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.














Leave a Reply