Categories

ஆம்பூர் காது கேளாதோர் பள்ளியில் இலவச மருத்துவ முகாம்.

ஆம்பூர் நவ 5,

திருப்பத்தூர் மாவட்டம்,மாதனூர் ஊராட்சி ஒன்றியம்,சார்பில் ஆம்பூர் காதுகேளாதோர் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாதனூர் வட்டார வளமையம் நடத்திய 0-18 வயதுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாதனூர் ஒன்றியக் குழு பெருந்தலைவர் அகரம்சேரி .சுரேஷ்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, சிறப்புரையாற்றி, மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத் திறனாளி நலஅலுவலர் கண்ணன் வட்டாரக் கல்வி திருப்பத்தூர் மாவட்டம், வட்டாரக் கல்வி மேற்பார்வை யாளர் ஜெயசுதா,
ஒன்றியக் குழு உறுப்பினர்  கார்த்திக்ஜவகர்,மருத்துவர் ஸ்டெம்பி,
மு.தலைமை ஆசிரியர் நல்ஆசிரியர் விருது பெற்ற லயன் சங்கம் கருணாநிதி
மற்றும் லயன் சங்க நிர்வாகிகள்
பிர்தேஸ்அகமது,  ஸ்ரீதர், ரவீந்திரநாத் பாபு, நேதாஜி,ஐ.இ.எல்.சி.காது கேளாதோர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜேபஸ் இன்பகண்ணன்ஆசிரியர் யாழன்ஆதி
மற்றும் பயனாளிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.