
தேனி பிப்-10
சின்னமனூர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகடமி மற்றும் கே.கே.கே உலக சிலம்பம் கூட்டமைப்பு, இணைந்து நடத்தும் “தென் மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் யோகா போட்டி சின்னமனூர் புனித பிரான்சிஸ் அசிசி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பள்ளி முதல்வர் அருட்சகோதரி ஜெயந்தி கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி செயலாளர் தமிழ்வேந்தன், கோகிலா, கே.கே.கே உலக சிலம்பம் கூட்டமைப்பு தலைவர் கார்த்திக், தலைமை பயிற்சியாளர் சரவணகுமார், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் மணிகண்டன், சிலம்பம் மற்றும் யோகா பயிற்சி ஆசிரியர்கள் அபிராமி,ராமு, விக்னேஷ்வரன்மதியழகன், பொன்செல்வராஜா, பர்வீன்பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் பல்வேறு பள்ளிகளில் சிலம்பம் மற்றும் யோகா கலைகளில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.














Leave a Reply