
பெரியகுளம் மார்ச் -04
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தெ.கள்ளிப்பட்டி அம்பேத்கர் நகரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட பொருளாளர் கவிஞர் அருண்அழகு – லதா ஆகியோரின் இல்லத்தில் புதியதாக கட்டியுள்ள உரையாடல்_நூலகத்தை முன்னாள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க தேனி மாவட்ட பொருளாளர் கவிஞர் யாழ் தண்விகா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஏர். மகாராசன், தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் மாணிக்கராஜ், கோடை பண்பலை அறிவிப்பாளர் ரங்கநாதன், எழுத்தாளர் தமிழ் வேந்தன், சமூக ஆர்வலர் சுந்தர்ராஜன், ஜெய் பீம் அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர்கள் பிரியா, பிரியதர்ஷினி, சுவேதா முத்து செல்வம்,
ஜெனேடிக் ஸ்டுடியோ உரிமையாளர் கனி முத்து மற்றும் கே.வி கேண்டின் உரிமையாளர் வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.கவிஞர் அருண் அழகு பேசுகையில் “இந்த
உரையாடல் நூலகத்தில் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள்,பொதுஅறிவு,கணினி அறிவு, வரலாற்று நூல்கள், குழந்தைகளுக்கான நூல்கள், சுய வரலாற்று நூல்கள் என பலதரப்பட்ட நூல்களின் களஞ்சியமாகவும் இங்கு உள்ளது. வருகின்ற விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு இலவச பயிற்சி கூடமாக நடைபெற உள்ளது.ஆகவே கோடை விடுமுறை நாட்களில் மாணவர்கள் தொலைக்காட்சி மற்றும் செல்போனில் மூழ்காமல் உரையாடல் -நூலகத்தை பயன்படுத்துவார்கள் என நம்புகிறேன்” என்று கூறினார்.நிகழ்ச்சியின் முடிவில் லதா அருண் நன்றி கூறினார்.













Leave a Reply