ஜெயராஜ் அன்னப்பாக்கியம் மகளிர் தன்னாட்சி கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்;

பெரியகுளம் பிப் – 14
தேனி மாவட்டம்
பெரியகுளம் அருகே ஜெயராஜ் அன்னப்பாக்கியம் மகளிர் தன்னாட்சிக் கல்லூரி வரலாற்று ஆய்வு மையம் மற்றும் இலங்கையின் ஜாப்னா பல்கலைக்கழகம்,வரலாற்றுத் துறை இணைந்து, பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது.
வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் அ. ஜெசிந்தா வில்வீனா வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து, கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் எஸ். இருதய கலைச்செல்வம் தலைமையுரை ஆற்றினார்.
கல்லூரி செயலர் அருட்சகோதரி முனைவர் ஆர். சாந்த மேரி ஜோஷிட்டா மற்றும் தலைமை இல்ல அருட்சகோதரி முனைவர் . எம்.ரெஜினாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் கு.மாவலி ராஜன் சிறப்புரை ஆற்றினார். பேராசிரியர்கள் ஆர்.சுமேஷ், ஜெ.வில்லியம், எஸ். சுதர்சன், இலங்கை ஜாப்னா பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ். சாந்தினி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.பேராசிரியர் கு.ஜெனிபர் அறிக்கை வாசித்தார்.இந்த கருத்தரங்கத்திற்கான ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தனர்.நிகழ்ச்சி முடிவில் முனைவர் ஜே.ஆர் அனோஜா நன்றி கூறினார்.














Leave a Reply