Categories

ஜனவரி 25 மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள். திருப்பத்தூரில் அமமுகழகம் சார்பில் வீரவணக்கம்.



திருப்பத்தூர் ஜன.25-

திருப்பத்தூர் பேருந்து நிலையம்  எம்.ஜி.ஆர் சிலை அருகில்
ஜனவரி 25ஆம் தேதி அனுசரிக்கப்படும் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் – திருப்பத்தூர் மாவட்டம் சார்பில், திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் சிலை அருகில், மொழிப்போர் தியாகிகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில், மொழி உரிமைகளுக்காக உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளை நினைவு கூரும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டு, மாவட்ட செயலாளர் ஞானசேகரன் அவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.


மேலும், இந்த நினைவு நாள் நிகழ்ச்சி மாவட்ட மாணவரணி மற்றும் வழக்கறிஞர் பிரிவு சார்பிலும் சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் கழகத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, மெழுகுவர்த்தி ஏற்றி மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தினர்.
மொழியின் மரியாதை, இனத்தின் அடையாளம் மற்றும் தமிழின் உரிமைக்காக போராடி உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் தியாகம் என்றும் தமிழர்களின் மனங்களில் நிலைத்திருக்கும் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.