Categories

நாக்கின் மூலம் டைப்பிங் செய்துசாதனை-கிருஷ்ணகிரி இளைஞர் ‘இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டில்’ இடம்


கிருஷ்ணகிரி டிச 16,
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கணினி இயக்குபவராக பணியாற்றி வரும் சுரேஷ் குமார் என்பவர், நாக்கின் மூலம் கீபோர்டை வேகமாக இயக்கி ஆங்கில எழுத்துக்களை டைப் செய்து அபூர்வமான சாதனையை படைத்து உள்ளார்.கணினி இயக்கத்தில் புதுமை சாதனை ஒன்றை நிகழ்த்தும் நோக்கில், இதுவரை யாரும் முயற்சி செய்யாத வகையில் நாக்கின் உதவியுடன் கீபோர்டை இயக்கி டைப்பிங் செய்வதில் சுரேஷ் குமார் பயிற்சி மேற்கொண்டார்.



நீண்டகால முயற்சியின் பலனாக, ஆங்கில எழுத்துக்கள் A முதல் Z வரை முன்னோக்கியும், Z முதல் A வரை பின்னோக்கியும் மொத்தம் 25.73 விநாடிகளில் டைப் செய்து ‘இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டில்’ தன்னிடம் இடம் பெற்றுள்ளார்.

இந்த சிறப்பான சாதனையை பாராட்டி, இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு அமைப்பினர் சுரேஷ் குமாருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.

இதுகுறித்து சுரேஷ் குமார் தெரிவித்ததில், “கணினி இயக்குபவராக பணியாற்றும் போது, புதுமையான ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு உற்சாகம் அளித்தது. தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு, நாக்கின் உதவியால் டைப்பிங் செய்வதில் திறனை வளர்த்தேன். தற்போது 247 தமிழ் எழுத்துக்களை நாக்கின் மூலமாக டைப்பிங் செய்யும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.


கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பெறும் நோக்கில் விண்ணப்பித்துள்ளேன்,” என்றார்.

தன்னம்பிக்கை, முயற்சி மற்றும் தொடர்ந்த கற்றலின் மூலம் சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கான உயிர்வாழும் எடுத்துக்காட்டாக சுரேஷ் குமார் திகழ்கிறார்.