Categories

மொரப்பூர், பொம்மிடி ரயில் நிலையங்கள், அமிர்த் பாரத் திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு பெற்று, இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தேசத்துக்கு அர்ப்பணிப்பு



தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் இந்த நிலையங்கள், உலகதர உள்கட்டமைப்பு, முழுமையான டிஜிட்டல் தகவல் வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற சிறப்பு வசதிகளை தனித்து நிற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.



அமிர்த் பாரத் நோக்கம்

அமிர்த் பாரத் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தேசிய அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட
சேலம் கோட்டத்தில் செயல்படும் மொரப்பூர், பொம்மிடி ஆகிய இரண்டு ரயில் நிலையங்களும் முழுமையாக மறுசீரமைப்பு பெற்றுள்ளன.
இவை நவீன கட்டிடங்கள்,  லிப்ட்கள், பாதுகாப்பான நடைமேம்பாலங்கள், டிஜிட்டல் தகவல் பலகைகள், ஒலிபெருக்கி வசதிகள், LED திரைகள் மூலம் பயணிகளுக்கான அனுபவத்தை முற்றிலும் மாற்றியிருக்கின்றன.

பொம்மிடி நிலையத்துக்கு சுமார் ரூ.16 கோடி, மொரப்பூருக்கு ரூ.12.5–16.8 கோடி வரை மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் முடிவுற்றுள்ளன.

இரு நிலையங்களிலும் பழைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு, போர்டிகோ கொண்ட புதிய முகப்புக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொம்மிடியில் 2700 சதுர மீட்டர், மொரப்பூரில் 3000 சதுர மீட்டர் சுழற்சி (பார்க்கிங்) பகுதிகள், 10 மீட்டர் அகல அணுகு சாலைகள், பாதசாரி பாதுகாப்பு நடைபாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்குத் தனியான நிறுத்து இடம், நுழைவு–வெளியேற்ற வளைவுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

முதியோர், மாற்றுத்திறனாளர் வசதிகள்மேம்படுத்தப்பட்ட காத்திருப்பு அறைகள், உயர்தர ஓய்வறைகள் (எக்ஸிகியூட்டிவ் லவுஞ்ச்கள்), 6 மீட்டர் அகல நடைமேம்பாலங்கள், 2 மின் தூக்கிகள் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளர்களுக்கு சாய்தளங்கள், நடைமேடைகள், குறைந்த உயரத்திலான கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் எளிதில் அடையக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கிரானைட் இருக்கைகள், புதிய மரச்சாமான்கள், 23 புதிய நடைமேடை கூரைகள் (பொம்மிடி) ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

தகவல், ஒளிப்பதிவு வசதிகள்
பொம்மிடி நிலையத்தில் 52 ஒளிரும் தகவல் பலகைகள், 1–5, 1–3 வரிசை திரைகள்;

மொரப்பூரில் 65 ஒளிரும் டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு ரயில் விவரங்களை தொடர்ந்து வழங்குகிறது.

இரு நிலையங்களிலும் 2 உயர்மின் கோபுர விளக்குகள்,
பொம்மிடியில் 10, மொரப்பூரில் 30 தெருவிளக்குகள் நிறுவப்பட்டு, இரவு நேர பயணிகளுக்கு பாதுகாப்பு நிலை உருவாக்கப்பட்டுள்ளது..

நேரடி ஒளிபரப்பு
மார்ச் 1 அன்று மதுரையில் நடைபெறும் பிரமாண்ட அமிர்த் பாரத் நிலைய அர்ப்பணிப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி வழியாக இந்த இரு நிலையங்களையும் திறந்து வைக்கிறார்.
மொரப்பூர், பொம்மிடி நிலையங்களில் அகண்ட LED திரைகள் அமைக்கப்பட்டு, நேரடியாக விழாவை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த மாறுதல்கள் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்று,
தர்மபுரி பகுதியின் போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு புதிய அடையாளமாக அமைந்துள்ளது என ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கிறது.