Categories

அரூரில் தூய்மை பணியாளர் நிரந்தரப் பணிக்காக ஆர்ப்பாட்டம்


தர்மபுரி டிச 8,
கோவை சி.ஐ.டி.யு மாநில மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பேரில், தமிழகமெங்கும் இன்று தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் பெருமளவில் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த போராட்டத்தில், ஊரக உள்ளாட்சித் துறையில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் நிரந்தரப் பணி வழங்கப்பட வேண்டும், பணி பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும், நியாயமான சம்பளமும், பணியாளர்கள் அனைவருக்கும் போனஸும் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அரூர் நகராட்சிக்கு முன்பாக நடைபெற்ற இந்த வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம், தோழர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதில் தோழர்கள் பழனி, ராமன், பிரேம், கோகுல், தளபதி மற்றும் பெண் தோழர்கள் மணிமேகலை, ஜோதி, சின்னம்மாள், அமுதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் சி.ஐ.டி.யு மாவட்ட துணைச் செயலாளர்
சி. ரகுபதி, தோழர் மணிவண்ணன்,  உள்ளிட்ட மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.