Categories

வாணியம்பாடியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி. மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.



வாணியம்பாடி, நவ 5,
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 31வது வார்டு   நியூடவுன் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி  மேற்கொள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்( BLO) மூலம் வீடு, வீடாகச் சென்று வாக்காளர் கணக்கீட்டு படிவம்  வழங்கப்படும் பணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான  க.சிவசௌந்திரவல்லி நேரில் பார்வையிட்டார்.
அப்போது வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம், நகராட்சி ஆணையாளர் ரகுராமன்,  வட்டாட்சியர் சுதாகர்,வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.