
.
புதுக்கோட்டை.டிச.6-
புதுக்கோட்டை அருகே உள்ள பள்ளத்திவிடுதி அரசு தொடக்கப்ப ள்ளி வளாகம் மற்றும் கழிவறைகள் தூய்மை இல்லாமல் சுகாதா ர சீர் கேடு கெட்டு இருப்பதாக குற்றம் சாட்டி மாணவர்கள் மற்று ம் பெ ற்றோர்கள் திடீர் சாலை மறியல்.
மேலும் புதுக்கோட்டை இந்து மாவட்டம் முன்னணி செயலாளர் அபிமன்யு முருகேசன் மாணவர்களை வைத்து ஏன் போராட்டம் செய்கிறீர்கள் என்று கேட்டு திமுக நிர்வாகியும் பெற்றோர் ஆசிரி யர் கழக தலைவருமான மணிகண்டன் உள்ளிட்ட இருவரோடு வாக்குவாதம் செய்து சாலையிலேயே கட்டி உருண்டு கைகலப்பு நடத்தியதால் மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு பயந்து ப ள்ளிக்குள் சென்றதால் இந்து முன்னணி நிர்வாகி முருகேசனா ல் பரபரப்பு.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடு தி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி ஐந் தாம் வகுப்பு வரை உள்ளது. 72 மாணவ மாணவியர்கள் கல்வி ப யின்று வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் தவிர மற் ற மூன்று ஆசிரியர்கள் தற்போது பணியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பள்ளி வளாகம் கழிவறை வகுப்பறைகள் தூய் மை பராமரிக்கவில்லை சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையி ல் குப்பை கோலங்களாக காட்சியளிப்பதாக குற்றம் சாட்டி பள்ளி யில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மா ணவர்கள் பள்ளியின் வளாகத்திலேயே பள்ளிக்கு உள்ளே செல் லாமல் நிறுத்தி வைத்து முற்றுகையில் ஈடுப்பட்டிருந்தனர்.
இது குறித்து ஆலங்குடி போலீஸ் மற்றும் திருவரங்குளம் வட்டா ர கல்வி அலுவலருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர்.. அ ங்கு வந்த திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலர் அரங்கநாத ன் மற்றும் ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணிய ன் மற்றும் போலீசார் ஊர் பொதுமக்கள் அங்கு திறன்டனர்.
இதையடுத்து இவர்கள் வருவதற்கு முன்னதாக ஆலங்குடியில் இருந்து கொத்தமங்கலம் செல்லும் பள்ளிக்கு முன்பு உள்ள சா லையில் கடந்த 6 மாதங்களாக பள்ளிக்கு தலைமையாசிரியர் இ ல்லாத சூழல் நிலவி வருவதாகவும் பெற்றோர் மற்றும் பள்ளி மே லாண்மை குழுவினர் குற்றம் சாட்டியதோடு, பல முறை ஆசிரியர் களிடம் முறையிட்டதோடு, பள்ளி மேலாண்மை குழுவில் தீர்மான ம் ஏற்றி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறி மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பெற்றோர்ர் ஆசிரியர் கழகத் தலைவரும் திமுக நிர்வாகியுமான மணிகண்டன் பள்ளிக்கு எதிரில் உள்ள சாலை யில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களோடு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த பள்ளத்திவிடுதினயை சேர்ந்த புதுக்கோட்டை இந்து மாவட்ட முன்னணி செயலாளர் அபிமன்யு முருகேசன் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறிய ல் செய்வது எதற்கு மாணவர்களை அமர வைத்திருக்கீர்கள் என் று கேள்வி கேட்டதோடு மாணவர்களை வகுப்பறைகளுக்கு அனு ப்புமாறு கூறியதாக கூறப்படுகிறது.
இதில் பெற்றோர் தரப்பிற்கும் முருகேசனுக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் தள்ளுமுள்ளு கைகலப்பு .ஏற்பட்டதோடு இவ ர்கள் ஒருவருக்கொருவர் சட்டையை பிடித்து கிழிதத்து அவரை கீழே தள்ளி கட்டி உருண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட து.
அரசு பள்ளியின் எதிரில் உள்ள சாலையில் பெற்றோரும் சமூக ஆர்வலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு பள்ளி முன்பு கட்டிப் பிடித்து உருண்டதால் சாலை மறியல் ஈடுபட்டிருந்த பள்ளி மாண வர்கள் அலறியடித்துக் கொண்டு பள்ளிக்குள் சென்று விட்டனர்
பின்னர் அங்கிருந்தவர்கள் இருவரையும் விளக்கி விட்ட நிலை யில் சம்பவ இடத்திற்கு வந்திருந்த போலீசார் போராட்டத்தில் ஈ டுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இனி வரக்கூடிய காலங்களில் பள்ளியை தூய்மைப்படுத்த பணி யாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அதுவரை 100 நாள் பணியாளர்களை வைத்து பள்ளி வளாகம் தூய்மைப்படுத்தப்ப டும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவி ட்டனர். இச்சம்பவத்தால் பள்ளிக்கு எதிரில் 2 மணி நேரத்துக்கு மேலாக மறியில் மற்றும் பரபரப் பான சூழல் நிலவியது.
இதை தொடர்ந்து இந்து முன்னணி முருகேசன் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து ஆல ங்குடி போலீஸ் நிலையத்தில் அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஒரு போராட்டம் நடத்திய போது இது போன்ற சம்பவங்கள் ஆலங்குடி பகுதியில் மட்டுமே நடைபெறுவது பெரிதும் அபூர்வமானதாக ஆலங்குடி பகுதி மக்க ளால் பரபரப்பாக பேசப்படுகிறது.














Leave a Reply