
தர்மபுரி டிச 9,
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்திற்கு வரவிருப்பதை முன்னிட்டு, நிகழ்வுக்கான பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனையடுத்து, அதிகாரிகள் நேரில் சென்று ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் பி. பழனியப்பன் இல்லத் திருமண விழாவில் முதல்வர் பங்கேற்க இருப்பதால்
இதனை முன்னிட்டு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திருமண நிகழ்வு நடைபெறும் இடத்தை நேரில் பார்வையிட்டு, ஏற்பாடுகளை பரிசீலித்தார்.
அவருடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன், துணைக் காவல் கண்காணிப்பாளர் சதீஷ், அரூர் வருவாய் கோட்டாட்சியர் செம்மலை உள்ளிட்ட பல துறைகளின் உயர் அதிகாரிகள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிகழ்வைச் சிறப்பாக நடத்துவதற்காக சுற்றுப்புறப் போக்குவரத்து ஒழுங்குகள், பொதுமக்கள் நுழைவுக் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.















Leave a Reply