Categories

தமிழக நீதிக்கட்சியில் தமிழக எழுச்சிப் பேரவை இணைப்பு விழா.



ஈரோடு ஜன‌ 24,

ஈரோடு சம்பத் நகரில் உள்ள கடோட் கஜா ரெஸ்டாரண்டில் அம்பேத்கரின் 69 ஆவது நினைவு நாளை முன்னிட்டு தமிழக நீதிக்கட்சியில் தமிழக எழுச்சிப் பேரவை இணைப்பு விழா நடைபெற்றது. தமிழக எழுச்சி பேரவையின் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழக எழுச்சிப் பேரவை மாநில பொதுச் செயலாளர் பெருமாள் உட்பட கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் மகளிர் அணியினர் தொண்டர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் அனைவரும் தமிழக நீதிக்கட்சியில் இணைந்தனர். இந்நிகழ்வில் தமிழக நீதி கட்சியின் தலைவர் மற்றும் நிறுவனர் வாழவந்தியார் கலந்துகொண்டு இணைப்பு விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார் மேலும் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.