
பெரியகுளம் பிப்-08
தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து தேனி பாராளுமன்ற உறுப்பினரும்,தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வன் குத்துவிளக்கு ஏற்றினார்.இந்நிகழ்வில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார்,பெரியகுளம் நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார்,பெரியகுளம் அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் குமார்,விசிக பெரியகுளம் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் சுசி.தமிழ் பாண்டியன்,திமுக நகர செயலாளர் முகமது இலியாஸ்,விசிக முன்னாள் தேனி திண்டுக்கல் மண்டல செயலாளர் தமிழ்வாணன்,மண்டல துணைச் செயலாளர் நாகரத்தினம்,நகர்மன்ற உறுப்பினர்கள் சுதா நாகலிங்கம்,அசினா முகமது,நகர துணைச் செயலாளர் சேதுராமன்,நகர பொருளாளர் சுந்தரபாண்டியன்,விசிக பெரியகுளம் நகர செயலாளர் ஜோதி முருகன், பெரியகுளம் நகர வளர்ச்சி சங்க நிர்வாகிகள் அன்புக்கரசன்,மணி கார்த்தி,நேசம் தொண்டு நிறுவன இயக்குனர் முருகன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கார்த்திக், திமுக நிர்வாகிகள்,மருத்துவர்கள்,செவிலியர்கள்,அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.














Leave a Reply