
தர்மபுரி டிச 9,
தர்மபுரி மாவட்டம் அரூர் நகராட்சியில் சாலை அகலப்படுத்த நிதி ஒதுக்கி பல மாதங்கள் ஆனாலும், இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை.
தமிழக அரசும்
மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் செயலிழப்பு இதன் மூலம் வெளிப்படுகிறது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பயணத்தை முன்னிட்டு திடீரெனவே அரூர் நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை அவசரமாகத் தொடங்கியுள்ளது.
பல மாதங்கள் சும்மா இருந்த துறை, முதலமைச்சர் வருகை அறிவிப்பு வந்ததும் காட்சிக்காக மட்டும் இயங்குவது போலத் தோன்றுகிறது.
இது அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தின் உச்சமாக மக்களால் குறிப்பிடப்படுகிறது.
அரூர் பேருந்து நிலையம் முதல் பைபாஸ் வரை வாகனங்கள் சுருண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ள போதிலும், நெடுஞ்சாலைத்
துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
டிசம்பர் 14ஆம் தேதி முதலமைச்சர் வருகையைக் கண்டு
“நாங்க நல்ல ஆபிசர் CM sir!” என்ற பரப்புரைகள் போல சாலையோரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன.அமைச்சர் எ.வ.வேலுவும், அரூர் தொகுதி மக்களின் நலனுக்கு அவசியமான சாலை, அடிப்படை வசதிகள் குறித்து எந்த அக்கறையும் காட்டவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆதி திராவிடர், வேளாளர் போன்ற சமூகங்கள் அதிகமாக இருப்பதால் அரசால் புறக்கணிக்கப்படுகின்றன என்றும் விமர்சனங்கள் அதிகரிக்கின்றன.
அரூர் நெடுஞ்சாலைத்
துறை அதிகாரிகள்
“முதல்வர் வருகைக்காக மட்டும் வேலை, மக்கள் தேவைக்காக அல்ல” என்ற கொள்கையில் செயல்படுவதாக உள்ளூர் மக்கள் குரல் கொடுக்கின்றனர்.
அரசு மற்றும் நெடுஞ்சாலைத்துறை இரண்டும் சேர்ந்து மக்களையும், முதலமைச்சரையும் ஏமாற்றி வருகின்றன என்பது வெளிச்சம் பெற்றுள்ளது.















Leave a Reply