Categories

விடுதலை சிறுத்தைகள் கட்சி சமூகநீதி உணர்வை வெளிப்படுத்திய நிதியுதவி  பண்ருட்டி இரமேஷ் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கல்



சென்னை டிச 19,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்களின் அறிவுறுத்தலின் படி, கட்சியின் சமூகப் பொறுப்புணர்வை பிரதிபலிக்கும் வகையில் நிதி மற்றும் இரங்கல் நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் நடைபெற்றுவருகிறது.
அதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்ட சமூக பெண்ணுரிமை சமூக போராளி தோழர் கி. காயத்ரி அவர்கள், பண்ருட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் மறைந்த தோழர் இரமேஷ் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

மாரடைப்பால் அண்மையில் காலமான இரமேஷ் அவர்களின் மறைவு, கட்சியினருக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் பேரிழப்பாகும்.

இவரை இழந்த துயரத்தில் கடுமையான மன உளைச்சலால் உடல் நலக்குறைவுக்குளான அவரது மனைவி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது சிகிச்சை செலவுக்காகவும், குடும்பத்தின் நலனுக்காகவும் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி எப்போதும் சமூகநீதி, சமத்துவம், மனிதநேயம் போன்ற அடிப்படைக் கோட்பாடுகளில் உறுதியாக நிற்கும் இயக்கமாக விளங்குகிறது.

துயரங்கள் நேர்ந்த பொதுமக்களுடன் தோளோடு தோள் நின்று செயற்படும் அரசியல் பண்பை மீண்டும் வலியுறுத்தும் விதமாக இந்த செயற்பாடு அர்த்தமுள்ள ஒன்றாக அமைந்துள்ளது.

தேசிய தலைவர் திருமாவளவன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் காயத்ரி அவர்களின் சமூகப் பணி மாநிலம் முழுவதும் பாராட்டுக்குரியதாகப் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் இவரின் செயற்பாட்டிற்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.