
நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு கிராமத்தில் செயல்பட்டு வரும் நஞ்சநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கத்தின் நவீனமயமாக்கப்பட்ட கட்டடம் திறப்பு விழா மற்றும் இத்தலார் பகுதியில் அமைந்துள்ள மகாலிங்கா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கத்தில் உறுப்பினர் கல்வித் திட்ட நிகழ்ச்சி மண்டல இணைப்பதிவாளர் மரு. தே. சித்ரா அவர்கள் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது. சட்டமன்ற மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி பல்வேறு கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் நவீனமயமாக்கப்பட்டும் புதுப்பிக்கப்பட்டும் வருகின்றன.

இவ்வாறாக நீலகிரி மாவட்டத்தில் இச்சங்கம் தேர்தெடுக்கப்பட்டு நவீனமயமாக்கப்பட்டு தற்போது மண்டல இணைப்பதிவாளர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா நிகழ்வில் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்/துணைப்பதிவாளர் திரு. ராஜா வாழ்த்துரை வழங்கினார். இதனை தொடர்ந்து உறுப்பினர் கல்வித் திட்டம் நடைபெற்றது. மண்டல இணைப்பதிவாளர் இந்நிகழ்சிக்கு தலைமையேற்று தலைமையுரையாற்றினார். சங்கத்தின் செயலாளர் திரு. நடராஜன் வரவேற்புரை வழங்கினார். நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் திரு. ரா. கௌரிசங்கர் திட்ட விளக்க உரையாற்றினார். துணைப்பதிவாளர் திரு. சி. அய்யனார் முன்னிலையரையாற்ற சரக துணைப்பதிவாளர் திரு. அஜித்குமார் சிறப்புறையாற்றினார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சரக மேற்பார்வையாளர் திரு. மணிகுண்டன் கூட்டுறவு துறையின் மூலமாக வழங்கப்படக் கூடிய பல்வேறு கடன்கள் குறித்தும் மத்திய கூட்டுறவு வங்கி வாயிலாக வழங்கப்படும் பல்வேறு விதமான தொழில்நுட்ப சேவைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இத்தாலார்தொழிற் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையின் சார்பாக கலந்து கொண்ட அதன் செயலட்சியர் திரு. மணிமாறன் தொழிற் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையினுடைய செயல்பாடுகள் குறித்தும், உறுப்பினர்கள் அதிகப்படியாக தொழிற் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு தங்களது தேயிலை வழங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உறுப்பினர்களிடையே கலந்துரையாடல் நடைபெற்றது. இறுதியாக சங்க செயலாட்சியர் திருமதி. பரிமளா நன்றியுரை கூறி நிகழ்ச்சியினை முடித்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நஞ்சநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் திரு. ரமேஷ், ஊர் பெரியவர்கள், கூட்டுறவுத்துறை பணியாளர்கள், சங்க பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.














Leave a Reply