
தர்மபுரி, மார்ச் 21:
தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வீரப்பன்நாயக்கன்பட்டி பஞ்சாயத்தின் அண்ணா நகர் 8-வது வார்டு கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. .
இந்தக் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் – சாலைகள், வடிகால், மின்சாரம், தண்ணீர் விநியோகம் போன்றவை – கடந்த 30 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.

கிராம மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடமும் மனுக்கள் அளித்தபோதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்..
இதனால் அரசு மற்றும் அதிகாரிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், இது கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்ததாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மழைக்காலங்களில் தெருக்களில் மழைநீர் தேங்குவதால் சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை கீழே விழுந்து கை, கால் முறிவு ஏற்படுவது, தொற்று நோய்கள் பரவுவது போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். நேற்று திடீரென்று பெய்த கனமழையால் அண்ணா நகர தெருக்கள் குளம் போல மழைநீர், கழிவு நீர் தேங்கி நின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்..

இந்நிலையில், கிராம மக்கள் ஒன்றிணைந்து மின் மோட்டார் பயன்படுத்தி தெருக்களில் தேங்கிய நீரை அகற்றினர்.
நீண்ட நாட்களாக மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், தேங்கிய மழை, கழிவு நீரில் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் இறங்கி நெற்பயிர் நட்டும், குழந்தைகள் காகிதத்தில் கப்பல் செய்து தண்ணீரில் விட்டு விளையாடி அரசுக்கு எதிரான அமைதி போராட்டமாக எதிர்ப்பை தெரிவித்தனர்
கிராம மக்கள் கூட்டாகக் கூறுகையில், “வருகிற தேர்தலுக்கு முன் உரிய அடிப்படை வசதிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தேர்தலைப் புறக்கணிப்போம்” என எச்சரித்தனர்.
பேட்டி:
வெண்ணிலா அண்ணாநகர்














Leave a Reply