Categories

உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத வருவாய்த் துறையை கண்டித்து கிராம மக்கள் தர்ணா போராட்டம்


தர்மபுரி டிச 12,

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அச்சல்வாடி பகுதியில் பாதை ஆக்கிரமிப்பு பிரச்சனை மேலும் தீவிரமடைந்துள்ளது

உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படியே பாதையை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுக் கொடுக்க வேண்டும் என்பதில் எந்த நடவடிக்கையும் எடுக்காத வருவாய்த் துறை மீது கிராம மக்கள் கடுமையான அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அச்சல்வாடி அருகேயுள்ள ஒடசல்பட்டி கிராமத்தில் வசித்து வரும் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தாங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையை சிலர் ஆக்கிரமித்து விட்டதையடுத்து, பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் பாறாங்கற்களை மிதித்தே செல்லும் அவலநிலையை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டிருந்தாலும்,
அதனை வருவாய்த் துறை இதுவரை நடைமுறைப்படுத்தாதது குறித்து மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து,

அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள்,

“நீதிமன்ற உத்தரவை மதிக்காத வருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க
வேண்டும்” என கோரி கோஷங்கள் எழுப்பினர்.