
கோவை அக் 30,
மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை வனப்பகுதியில் மின் கம்பியில் சிக்கி காட்டுயானை உயிரிழப்பு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட ஓடந்துறை காப்புக்காடு ஒட்டிய விவசாய தோட்டம் ஒன்றில் வனப்பகுதி ஒட்டி மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது
திருமலை ராஜன் என்பவருக்கு சொந்தமான பாக்கு தோப்பில், பாதுகாப்புக்காக சுருக்கு மடி மின் வேலி அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் அருகே வனவிலங்குகள் வெளியேறாமல் இருக்க வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட அகழிகளும் உள்ளது .
அந்த அகழியினை கடந்து வெளியே வந்த ஒற்றை ஆண் காட்டு யானை, மின் கம்பியில் சிக்கி அகழிக்குள் விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் சசிகுமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்
முதல் கட்ட விசாரணையில் யானையின் வாய்ப்பகுதியில் தோட்ட பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட மின் கம்பிகள் சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது இதனை அடுத்து கோவையில் இருந்து மூன்று வன கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு யானையை பிரேத பரிசோதனை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது பிரேத பரிசோதனை முடிவில் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தெரிய வரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்













Leave a Reply