
ஈரோடு ஜன 25,
ஈரோடு மாவட்டம் பிளாட்டினம் மஹாலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் 25 வது மாநில பொது குழு கூட்டம் நடைபெற்று கொண்டுள்ளது. மாநில பொதுக்குழுவிற்கு மாநில மேலாண்மை குழு தலைவர் ஷம்சுல்லுஹா
ரஹமானி தலைமை தாங்கினார் மாநில தலைவர் அப்துல் கரீம் மாநில பொதுச் செயலாளர் முஜீபர் ரஹ்மான் மாநில தணிக்கை குழு தலைவர் சுலைமான் உள்ளிட்ட மாநில உயர்நிலை குழு உறுப்பினர்கள் மாவட்ட கிளை நிர்வாகிகள் மாவட்ட பேச்சாளர்கள் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.மேலும் பொதுக்குழுவில் இன்றைய அரசியல் சூழல், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தல் சிறுபான்மையினரின் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துவது குறித்தும் ,ஆளும் பாஜக அரசின் சிறுபான்மை விரோத போக்கை கண்டித்தும், இந்தியாவில் சிறுபான்மைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்தும்,தமிழகத்தில் அதிகரித்துள்ள போதை பொருள் நடமாட்டம் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் வருகின்ற 2026 முதல் ஜனவரி 2027 வரையான 10 மாத காலங்கள் “அண்ணல் நபியின் அழகிய முன்மாதிரி” எனும் தலைப்பில் பல்வேறு வடிவங்களில் இஸ்லாமிய மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து பொதுக்குழுவில் மாநில பொருளாளர் இப்ராஹீம், மாநில துணைத்தலைவர் தாவூத் கைசர், மாநில துணை பொதுச்செயலாளர் அப்துல் ரஹீம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.மாநில செயலாளர் சித்திக் இறுதியாக நன்றியுரையாற்றினர்.














Leave a Reply