
கோவை நவ 6,
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு : சுட்டுப் பிடிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதி – அரசு மருத்துவமனைக்கு நீதிபதி நேரில் சென்று விசாரணை !!!
மதுரையை சேர்ந்த 21 வயதான மாணவி ஒருவர் கோவையில் உள்ள கலைக் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், இங்கு உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரி சென்று வந்து உள்ளார். இந்த மாணவி கடந்த ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த தனது ஆண் நண்பருடன் காரில் வெளியே சென்று உள்ளார். இவர்கள் விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருத்தாவன் நகர் பகுதியில் காரை நிறுத்தி விட்டு இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர்.
அப்பொழுது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிகளின் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற கருப்புசாமி கார்த்திக் என்ற காளீஸ்வரன் இவர்களது உறவினர் மதுரை சேர்ந்த குணா என்ற தவசி ஆகிய மூன்று பேர் இரவு மது அருந்து விட்டு விமான நிலையம் பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத இருள் சூழ்ந்த பகுதியில் கார் நின்று இருப்பதை பார்த்து அருகில் சென்று பார்த்து உள்ளனர். காரில் கல்லூரி மாணவி காதலுடன் இருப்பதை பார்த்து முதலில் கல்லால் கார் கண்ணாடியை உடைத்து, அரிவாள் போன்ற ஆயுதங்களால் கார் கண்ணாடியை உடைத்து அவர்களை மிரட்டினர் காரில் இருந்து வெளியே வந்த காதலனை அரிவாளால் வெட்டி விட்டு மாணவியை தூக்கி சென்று கூட்டு பாலியல் பலத்காரம் செய்து உள்ளனர். இதைத் தொடர்ந்து ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் தேடி வந்த நிலையில், துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் அவர்களை பிடிக்க காவல் துறையினர் சுற்றி வளைத்த போது அரிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்று உள்ளதாக கூறப்படுகிறது. இதில் காவலர் சந்திரசேகர் என்பவர் படுகாயம் அடைந்தார். இதை அடுத்து தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டு மூன்று பேரையும் காவல் துறையினர் பிடித்தனர். இதில் மூன்று பேருக்கும் காலில் குண்டு பாய்ந்து. அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் மீது கோவை கிணத்துக்கடவு, கே.ஜி சாவடி, சூலூர், துடியலூர், பீளமேடு மற்றும் திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதிகளில் திருட்டு வழக்குகளும் உள்ளன. சத்தியமங்கலத்தில் நடந்த திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று விட்டு ஜாமினில் வந்து 30 நாட்கள் ஆகிறது. என காவல் துறையினர் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
இந்த கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான மூன்று பேர் மீதும் கூட்டு பாலியல் பலாத்காரம், அடித்து துன்புறுத்தல், பொருட்களை சேதப்படுத்தல் உள்பட ஆறு பிரிவுகளில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குணா என்கின்ற தவசி சதீஷ் என்கின்ற கருப்பசாமி கார்த்திக் என்ற காளீஸ்வரன் ஆகியோரிடம் கோவை நடுவர் நீதிமன்றத்தில் இருந்து நீதிபதி அப்துல் ரகுமான் மருத்துவமனைக்கு சென்று தற்பொழுது விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.














Leave a Reply