கோவை ஜூலை 12,
கோவை மத்திய சிறைச்சாலையில் சிறை வாசிகளுக்கு கண் பரிசோதனை முகாம் – 252 பேர் பயனடைந்தனர்.

கோவை மத்திய சிறையில் இந்திய மருத்துவ சங்கம்,பொன்னம்மாள் துரைசாமி கண் மருத்துவமனை,
செந்தமிழ் அறக்கட்டளை,
கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கம்
மற்றும் கோவை மத்திய சிறைத்துறை இணைந்து சிறையில் உள்ள சிறை வாசிகளுக்கு கண் சிகிச்சை முகாம் நடந்தது.

இந்த முகாமை செந்தமிழ் அறக்கட்டளை நிறுவனர் கனகசுப்பிரமணியனம்,
பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் ஜி எம் டி ஒருங்கிணைப்பாளர் லயன் செந்தில் குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இதில் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் கோசல் ராம்
பன்னாட்டு லயன்ஸ் இயக்க மாவட்ட ஆளுநர் செல்வராஜ் ஆகியோர் இந்த கண் பரிசோதனை முகாமை துவக்கி வைத்தனர்.

பொன்னம்மாள் துரைசாமி கண் மருத்துவமனை டாக்டர் அனுஷா கோசல்ராம் மருத்துவ குழுவினர்
252 சிறை இல்ல வாசிகளை கண் பரிசோதனை செய்து 165 சிறைவாசிகளுக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் ஈஷா யோகா மையத்தைச் சார்ந்த மோகன், நேரு நகர் லயன்ஸ் சங்கத் தலைவர் இன்ஜினியர் தேஜஸ்வினி, பெண்கள் தின மாவட்ட தலைவர் சுப்பு செந்தில்குமார், பேராசிரியர் கார்த்திக், நேரு நகர் லயன்ஸ் சங்க அட்மின் கிரீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.













Leave a Reply