
கோவை நவ 10,
கோவை மாவட்டம் மேற்கு மலைத்தொடர்ச்சியை ஒட்டி இருக்கும் பகுதிகளில், உணவுக்காக யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவது வாடிக்கையானது. இந்த நிலையில் சின்னத்தடாகம் அருகே உள்ள வரப்பாளையம் பொன்னூத்து அம்மன் கோவில் செல்லும், சாலையிலுள்ள வாத்தியார் தோட்டத்திற்குள், ஒற்றை காட்டு யானை அதிகாலை புகுந்ததுள்ளது. அது, மின்வேலியை சேதப்படுத்திவிட்டு, வாழைமரங்களை சாப்பிட்டுக்கொண்டிருந்தது. தோட்டத்திற்குள் இருந்து வரும் சப்தம் கேட்டு அதிகாலை 3.37மணியளவில், எழுந்த விவசாயி ஜீவானந்தம், டார்ச் லைட் வெளிச்சத்தில் தோட்டத்தை பார்த்த போது, ஒற்றை யானை வாழை மரங்களை சாப்பிட்டிக்கொண்டிருந்தது.
வெளிச்சம் வந்த திசையை நோக்கி வந்த யானை, விவசாயியை தாக்க முற்பட்டது. யானை வருவதை அறிந்து ஜீவானந்தம் தப்பிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. உணவு தேடி ஊருக்குள் வரும் யானைகளை விரட்ட வேட்டைத்தடுப்பு காவலர்கள் இருந்தாலும், போதுமான அளவு ஆட்கள் இல்லாததால் யானைகள் தொடர்ந்து காட்டை விட்டு வெளியே வருவதை வனத்துறையினரால் கட்டுப்படுத்த முடிவதில்லை.
காட்டுக்குள் யானைகளுக்கு போதிய உணவு கிடைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வத்துள்ளனர்.














Leave a Reply