
கோவை நவ 18,
டேட்டிங் செயலிகளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சிறிது தூரம் பேரணியாக வந்த நாம் தமிழர் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் நின்று முழக்கங்களை எழுப்பினர். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய காவல்துறை அதிகாரியின் மகனை கைது செய்ய வேண்டும், குழந்தைகளின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் செயலிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பெண்கள் உட்பட 50 கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஆன்லைன் டேட்டிங் செயலிகளை தடை செய்ய வலியுறுத்தி கோரிக்கை மனுவையும் அளித்தனர்.
( பேட்டிகள்: நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணியினர் )














Leave a Reply