Categories

கோவை இருகூரில் உள்ள தனியார் குடோனில் சிறுத்தை நடமாட்டம் அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் வெளியானது.

கோவை நவ‌ 21
இருகூர் ராவுத்தர் பிரிவு NEPC மில் எதிர்ப்புறம் அமைந்துள்ள குடோனில் கடந்த பன்னிரெண்டாம் தேதி சிறுத்தை நடமாட்டத்தை சிசிடிவி புட்டேஜில் யதார்த்தமாக நேற்று cctv யில் பார்த்தபோது சிக்கிய காட்சி


கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட  வனப் பகுதி கேரள மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால் இந்த பகுதியில் எப்போதும் வன விலங்குகளின் நடமாட்டம் காணப்படும் குறிப்பாக யானைகள், சிறுத்தைகள் அதிக அளவில் உள்ளதால் இவை இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வருவது வழக்கம் இந்நிலையில் கடந்த 12ம் தேதி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று 15 கி.மீ தொலைவில் உள்ள  இருகூர் பகுதிக்கு வந்துள்ளது, பின்னர் நொய்யல் ஆற்றுப்பகுதிக்கு அருகில் உள்ள தனியார் மோட்டார் கம்பெனிக்குள் நுழைந்துள்ளது பின்னர் அந்த பகுதிக்குள் உலா வந்த சிறுத்தை அங்கிருந்து வெளியே சென்றது, அப்போது இரவு பணியில் இருந்த காவலர் சிறுத்தை அங்கிருந்து ஓடி செல்வதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார், இந்த நிலையில்  தனியார் கம்பெனிக்குள் சிறுத்தை வந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது அதில் சிறுத்தை பதுங்கி இருப்பது தெரியாமல் ரோந்து செல்லும் இரவு காவலர் சிறுத்தை ஓடுவதை பார்த்து அதிர்ச்சியில் உறையும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் அறிந்த கோவை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர். மேலும்  தற்போது அங்கே சிறுத்தை இருப்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.