Categories

ஆளுநர் ரவியை கண்டித்து தாராபுரம் பகுதியில் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் டிச 6,

தாராபுரம் நகர திராவிட கழகத்தின் சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ரவியை கண்டித்து நகரத் தலைவர் சின்னப்பதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்நகர இளைஞர் அணி அமைப்பாளர் கோடிஸ்வரன் வரவேற்புரையாற்றினார்.   இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக தோழர்கள் கிருஷ்ணன், மாவட்ட தலைவர்தம்பி பிரபாகரன், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்டத் துணைத் தலைவர் மாயவன், மாவட்ட துணைச் செயலாளர் புள்ளியான்,
கழக காப்பாளர் மயில்சாமி,சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் தாராபுரம் ஒன்றிய செயலாளர் முருகன்,உடுமலை ஒன்றிய செயலாளர் முருகேசன், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் தங்கவேலு, உடுமலை ஒன்றிய செயலாளர் கந்தவேல், கடத்தூர்
பெரியார் பித்தன், கணியூர் அர்ஜுனன்
மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.இதில் தோழமைக் கட்சி தோழர்கள்விடுதலை சிறுத்தைகள் கட்சியில் முத்தமிழ் வேந்தன், மாநில துணை செயலாளர் விவசாய அணி தமிழ் முத்து, முன்னாள் மாவட்ட செயலாளர் ஆற்றல் அரசு, மாநில துணைச் செயலாளர் தொழிலாளர் அணி நா செந்தில்குமார், நகரச் செயலாளர் வளவன் வினோத்,இந்திய தேசிய காங்கிரஸ் அப்துல் கபூர், மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, ஆதித்தமிழர் பேரவை ராஜேந்திரன், மாவட்ட செயலாளர், சுகன்யா மாவட்ட மாணவரணி செயலாளர்,ராஜேந்திரன் கந்தசாமி,தமிழ் புலிகள் கட்சி முகிலரசன், மாநில முதன்மைச் செயலாளர்
ராசசேகர்,மாவட்ட செயலாளர் தண்டபாணி, தனசேகர், மே-17 தாரை மணி,மக்கள் நீதி மையம்
கலையரசன்ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக தாராபுரம் நகரச் செயலாளர் முகமது சித்திக் நன்றியுரை ஆற்றினார்‌