
ஈரோடு பிப் 4,
ஈரோடு ஸ்ரீ வாசவி அரசு கல்லூரியில் தமிழ்நாடு அரசு மற்றும் ஸ்ரீ வாசவி கல்லூரி இணைந்து மூன்றாம் ஆண்டு இளங்கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கு “உலகம் உங்கள் கையில்”எனும் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் கலந்து கொண்டு சுமார் 514 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினியை வழங்கினார். கல்லூரியின் தலைவர் ஆதிகேசவன் தலைமை உரையாற்றினார். செயலாளர் பாலராம பிரகாஷ் வாழ்த்துரையாற்றினார் திமுக செயலாளர் சுப்ரமணியன், துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் மடிக்கணினி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை வழங்கினர். இறுதியாக பொருளாதார துறையின் உதவி பேராசிரியர் சித்தேஸ்வரன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியுரயாற்றினார்.
மாவட்ட நிருபர்: யோகேஸ்வரி
உள்ளாட்சி அரசு நாளிதழ்














Leave a Reply