
தர்மபுரி, பிப்ரவரி 24:
விடுதலை சிறுத்தை கட்சியின் தர்மபுரி மாவட்ட கிழக்கு துணைச் செயலாளர் செல்லை சக்தி மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்
கடந்த 19ஆம் தேதி அரூரில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து பாஜகவினர் அவதூறு பேசியதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சித் தொண்டர்கள் முறையிட்டதால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் பாஜக விசிக நிர்வாகிகள் ஒருவரை கட்டையால் தாக்கியதாகவும், செருப்புகளை வீசியதாகவும் கூறப்படுகிறது.
இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

என் நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் செல்லை சக்தி தனியார் மது
உரிமையாளரை பார்ப்பதற்காக மதுபான கடையில் அமர்ந்து கொண்டு இருந்தபோது, ஆர்.எஸ்.எஸ்., பாஜகவைச் சேர்ந்த பத்மராஜ் மற்றும் அவருடன் வந்தவர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அவரது காரின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன.இதுகுறித்து அரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, எட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவரை இரு இளைஞர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதை அடுத்து, விடுதலை சிறுத்தை கட்சித் தொண்டர்கள் அரூர் காவல் நிலையம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
அங்கு வந்த அரூர் உட்கோட்ட காவல்
துணை கண்காணிப்பாளர் சதீஷ்குமார், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது.
ஏற்கனவே அரூரில் பாஜக விசிக நிர்வாகி மீதான தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,
இந்தப் புதிய சம்பவம் இரு கட்சிகளுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்துள்ளது.













Leave a Reply